கோபி, ஜன. 12- கோபிசெட்டிபாளையம் பகுதியில் பள்ளி ஆவணங் களை முறைகேடாக எடுத்து வந்தாக அரசு பள்ளி தலைமை யாசிரியரை ஆசிரியர்கள் தாக்கிய சமபவம் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் சந்தி ரன். இவர் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் வருகைப்ப திவேடு, பராமரிப்புக்குழு நிதிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி ஆணவங்களை முறைகேடாக எடுத்துச் சென்று பள்ளியில் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்வித்துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்ட போது ஆவணங்கள் பள்ளியில் இல்லாமல் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தலைமையாசிரியர் சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டதில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளைத்தில் ஆவணங்கள் உள்ள தாக தொரிவித்துள்ளார். இதன் பின்னர் பலமுறை எச்ச ரித்தும் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்காததால் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் தலைமை யாசிரியர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் ஆவணங்கள் வீட்டில் இல்லை பேக்கரில் ஒன்றில் உள்ளதாக சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து கோபிசெட்டி பாளையம் பேருந்துநிலையம் அருகே பேக்க ரிக்கு தலைமையாசிரியரை அழைத்து வந்தபோது, தப்பி யோட முயற்சித்துள்ளார். இந்நிலையில் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் துரத்திப்பிடித்து சந்திரன் மீது தாக்கு தலை நடத்தியுள்ளனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்து றையினர் தலைமையாசிரியர் சந்திரனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தலைமையாசிரியர் சந்திரன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்து வெளி வந்தவர் என்பதும், அப்போது பணியிடநீக்கம் செய்யப்பட்டு வழக்கு முடிந்து தற்போது ஜுன் மாதத்தில் தான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.