சென்னை,ஜூலை 24- ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்களை தடுக்காமல் காவல்துறையினர் சிலைபோல் நிற்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். கட்டாய ஹெல்மெட் விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல் படுத்தக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது, முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பதிவான ஒரு நிமிட கண்காணிப்பு கேமரா காட்சிகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதிகள், 300க்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், அவர்களை தடுக்காமல் காவல்துறையினர் சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிவதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை யும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், கட்டாய ஹெல்மெட் விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவ தாகவும், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை வாகன ஓட்டிகள் உணராததற்காக காவல்துறை செயலற்றிருப்பதாக கூற முடியாது என்றும் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயரதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்து விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.