tamilnadu

img

போராட்ட ஆயுதமானது கோலம்!

சென்னை, டிச.30- கோலத்தை போராட்ட ஆயுத மாக்கி தமிழக மக்களின் கைகளில் தந்திருக்கிறார்கள் எடப்பாடி அர சின் காவல்துறையினர். குடி யுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலமிட்ட பெண்களை கைது செய்து அராஜகத்தை அரங்கேற்றிய காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரி வித்தும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய மூன்றையும் கைவிட வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் கோல மிடும் போராட்டங்கள் துவங்கி யுள்ளன.  குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில் ஞாயிறன்று கோலம் மூலம் பெண்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். “நோ சிஏஏ, நோ  என்.ஆர்.சி, நோ என்.பி.ஆர்” (No to CAA; No to NRC; No to NPR) என்ற வாசகங்கள் அந்த கோலங் களில் இடம்பெற்றிருந்தன. தகவ லறிந்து அங்கு வந்த காவல்துறை யினர் கோலம் வரைய அனுமதி மறுத்தனர். அதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே 6 பேரைக் கைது செய்து சிறிது நேரத்திற்குப் பின்னர் விடுவித்தனர். அவர்கள் மீது  முன் அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவு செய்தனர்.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கோலம்  வரைவது கூட தேசவிரோதமா என்று  கேள்வி எழுப்பியுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் தமிழகம் முழுவதும்   சிஏஏ, என்.ஆர்.சி எதிர்ப்பு கோல ங்கள் வரைந்து புத்தாண்டை கொண்டாட அழைப்புவிடுத்துள்ளது.

என்.சங்கரய்யா இல்லத்தில்...

முன்னதாக, திங்களன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள்  தங்களது இல்லங்களின் வாயில் களில் குடியுரிமை திருத்தச் சட்ட  எதிர்ப்பு கோலங்களை வரைந்தனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா இல்லத்தின் வாயிலிலும் எதிர்ப்புக் கோலம், திங்களன்று அதிகாலை பளிச்சிட்டது. 

திமுக 

திங்களன்று, சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை யிலுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு, கோபாலபுரத்தி லுள்ள கலைஞரின் வீடு, சிஐடி காலனியிலுள்ள  கனிமொழி எம்.பி, வீடு உள்ளிட்ட இடங்களில் கோலம் போடப்பட்டு, சிஏஏவுக்கு எதிரான வாசகங்கள் மூலம் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதுபோலவே திமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஆயிரக்கணக்கானோரின் வீடு களில் சிஏஏ எதிர்ப்புக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வீட்டிலும் கோலமிடப்பட்டு சிஏஏ எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அழகிரி, “கோலம் போட்டதற்காக கைது செய்தது அராஜகத்தின் உச்சகட்டம். என்னுடைய வீட்டிலும் எதிர்ப்பு கோலம் இட்டிருக்கிறோம். எங்களையும் வந்து கைது செய்யச் சொல்லுங்கள்” என்று கூறினார்.

கோலங்களின் செய்தி

இதுகுறித்து பிரபல  இயக்குநரும், ஒளிப்பதிவாளரு மான பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள் ளார். அவர் தனது பதிவில்,  ‘ தங்களுடைய எதிர்ப்பை வெளிப் படுத்த கோலத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று  கற்பனையிலும் நினைத்துப்பார்க்க வில்லை. இது, ஒவ்வொருவரின் மனதில் எத்தனை ஆழத்தில் இந்த விஷயம் பதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மனித உணர்வுகளுக்கு வண்ணம் தர முடியாது. ஆனால் இந்த வண்ணக் கோலங்களின் பின்னால் மறைந்துள்ள செய்தியை உலகமே அறிந்துள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.


 

;