ஜப்பான் பிரதமர் அறிவிப்பு
டோக்கியோ, மார்ச் 14- உலகின் மிகமுக்கியமான விளையாட்டு திருவிழா வான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் ஜப் பான் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இத னால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா?என்ற சந்தேகம் எழுந்தது. ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளி வைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். இந்நிலையில் டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்றும் எந்த தாமத மும் அல்லது ஒத்திவைப்பும் இருக்காது என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார்.