காற்றைப் பயன்படுத்தி புரத உணவு ஒன்றை தயாரிக்கும் முயற்சியில், பின்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர்.
பின்லாந்து நட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் காற்றை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் சோதனையை மேற்கொண்டனர். சோயா இனத் தாவரங்களில் அதிகமான புரதச் சத்து காணப்படும். இவற்றிற்கு போட்டியாக விளங்கக்கூடிய அளவிற்கு காற்றிலிருந்து தயாரிக்கப்படும் புதிய உணவில் புரதச் சத்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உணவுத் தயாரிப்பிற்கு மண்ணில் காணப்படக்கூடிய பாக்டீரியா இனம் ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தி நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுப்பதன் மூலம் இந்த உணவு பெறப்படுகின்றது.
இந்த செயல்முறைக்கு தேவையான மின்சாரத்தை, சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்று மின் உற்பத்தி என்பவற்றிலிருந்து பெறப்படுவதனால், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.