tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்கத் தடை!

ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது கோலாகலமாக நடக்கும் ஒரு விழா ஆகும். ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதிகளில் அதிக வெப்பநிலையால் காட்டுத்தீ பரவி வருகிறது. ஆஸ்திரேலியா முழுவதுமாக இதுவரை 97 காட்டுத்தீ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 43 காட்டுத்தீகளை இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பாதுகாப்புப் படையினர் தவித்து வருகின்றனர். வெப்ப அலைகளால் நாட்டின் பல நகரங்களிலும் அடர்த்தியான புகை மண்டலம் தென்படுகிறது. வெப்ப அலைகளால் இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.