ஆந்திராவில் சானிடைசரை மதுவுடன் கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன் 20க்கும் மேற்பட்டோர் அதிக போதைக்காக தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை மதுவுடன் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த புதனன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலை 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.