tamilnadu

img

அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 8 பேர் படுகாயம்

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாவாடோசா நகரின் புறநகர்ப் பகுதியில் மில்வாக்கி வணிக வளாகம் உள்ளது. அங்கு வந்த நபர் கடையின் முன் திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் 8 காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்ட வில்லை. இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்னவென்று தெரியாத சூழலில் காவல்துறையில் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து மறு அறிவிப்பு இன்றி வணிக வளாகம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;