states

‘அமித்ஷா வருகை பிரச்சனையைத் தீர்க்காது ஐம்மு-காஷ்மீரில் அடக்குமுறை தொடர்கிறது: மெஹபூபா

ஸ்ரீநகர், அக்.23- ஜம்மு -காஷ்மீரின் நிலைமையை சமாளிக்க ஒன்றிய அரசின் ஒரே வழி “அடக்குமுறை” தான் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார். சமீபத்திய வன்முறையைச் சமாளிக்க காஷ்மீரில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மும்பைத் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் எச்சரித்ததற்கு பதிலளித்த மெஹ்பூபா, இது, பள்ளத்தாக்கில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற அறிவிப்புக்கு முரணானது என்றும் கூறினார் “காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய பின்னர், பிபின் ராவத் விடுத்துள்ள அறிக்கை ஒன்றும்  ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜம்மு- காஷ்மீர் சூழ்நிலையைச் சமாளிக்க அடக்குமுறையைக் கையாள்வதே ஒன்றிய அரசின் வழிமுறையாக உள்ளது. காஷ்மீரில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற அவர்களின் அதிகாரப்பூர்வ கதைக்கு இது முரணனது” என்றும் மெஹ்பூபா கூறியுள்ளார்.

ஏராளமனோர் கைது, இணையதளத்தை முடக்குதல், மக்களை (குழந்தைகளைக் கூட விடாமல்), இரு சக்கர வாகனங்களைக் கைப்பற்றுதல் மற்றும் புதிய  பதுங்கு குழிகளை அமைத்தல் போன்ற கடுமையான,  நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும் இனியும் என்ன செய்ய விரும்புகிறது ஒன்றிய அரசு எனவும் மெஹ்பூபா கேள்வியெழுப்பியுள்ளார்.  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வந்தது குறித்து மக்கள் மெஹ்பூபா முப்தி  கூறுகையில், அமித்ஷா சர்வதேச விமான சேவை, மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார், இது ஜம்மு -காஷ்மீரில் “உண்மையான” பிரச்சனையை தீர்க்காது. “இது ஒரு ஒப்பனை வேலை” என்று கூறினார். “இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் உள்துறை அமைச்சரின் வருகை அமைந்திருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

;