இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட் சத்திர அதிரடி வீரருமான விராட் கோலி கிரிக்கெட் துறையில் மட்டுமின்றி ஹோட்டல் தொழிலி லும் ஈடுபட்டு வருகிறார். “ஒன் 8 கம் யூன் (One8 Commune)” என்ற பெயரில் தில்லி, புனே, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் விராட் கோலிக் குச் சொந்தமாக பிரம்மாண்ட ஹோட்டல் உள்ளது. சமீபத்தில் மகா ராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் புதிய கிளையை திறந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த பிரபல தமிழ் ராப் பாடகரான ராவண ராம் வேஷ்டி சட்டை அணிந்து மும்பையில் உள்ள விராட் கோலியின் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்றார். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள், “வேட்டி சட்டையில் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதியில்லை” எனக் கூறி பாடகர் ராவண ராமை வெளியே அனுப்பி உள்ளனர். இதனால் மன வருத்தம் அடைந்த ராவண ராம் ஹோட்டல் முன்பு நின்றபடி தனக்கு நேர்ந்த அவமதிப்பை பற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்,’’இதுதான் விராட் கோலி சாரின் “ஒன் 8” ஹோட்டல். நான் புதிய வேட்டி சட்டை அணிந்து தான் இந்த ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் “டிரஸ்கோட்” சரியில்லை என ஊழி யர்கள் என்னை அனுமதிக்க வில்லை. லுங்கி ஷார்ட்ஸ் அணிந்து வரும்போது அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நான் தமிழ் கலாசார உடையுடன் வந் துள்ளேன். அதோடு அதிக பசி யோடு வந்தேன். ஆனால் அவர் கள் என்னை அனுமதிக்கவில்லை. இதன் மீது நடவடிக்கை எடுப்பார் களா என தெரியவில்லை. ஆனால் இதுபோல மீண்டும் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என ஆதங்கத்துடன் கூறினார்.
ராவண ராம் வீடியோ வெளி யான அடித்த சில நிமிடங்களில் தமி ழர்கள், மராத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி விராட் கோலியின் ஹோட்டல் நிர்வா கத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விராட் கோலிக்கு கோரிக்கை
உணவு உண்ணவே ஹோட்டல் உள்ளது. உடைக்கும், உணவுக்கும் எவ்வித தொடர்பு கிடையாது. இது போன்ற ஆடை சார்ந்த நடவடிக்கை மீது ஹோட்டல் நிர்வாகமும், மேலும் ஹோட்டல் உரிமையாள ரான விராட் கோலியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வலுத்துள்ளது.