states

img

மணிப்பூரில் பதற்றம் வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு : வன்முறை சம்பவங்கள்

இம்பால், ஏப். 19 - 2 மக்களவை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் அறி விக்கப்பட்டது.  முதல் கட்டத்தில் ஒரு தொகுதி மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத்தில் அதே போல ஒரு தொகுதி மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அறி விப்பின்படி வெள்ளியன்று காலை 7  மணியளவில் முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. மணிப்பூர் மாநி லமே வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளி லும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், பலத்த பாது காப்பை மீறியும் தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடி யில் ஆயுதம் தாங்கிய கும்பல் சர மாரியாக துப்பாக்கிசூடு நடத்தியது. இதே போல ஹிரோய் ஷம்பா பகுதி யில் வாக்குச்சாவடிக்கு அருகேயும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடை பெற்றன.

வாக்குச் சாவடிக்கு தீ வைப்பு
மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் மர்ம கும்பல்  வாக்குச்சாவடியை சூறையாடிய நிலையில், இவிஎம் இயந்திரங் களுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில் அதே கும்பல் துப்பாக்கிச்சூடும் நடத்தி யுள்ளது. மேலும் எரோய்ஷம்பா பகுதி வாக்குச் சாவடியில் வன்முறை வெடித்ததாக தகவல் வெளியாகி யுள்ளது. 

மேற்கு வங்கம்,  சத்தீஸ்கரிலும் வன்முறை
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதி களில் கூச் பிகார், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கு மட்டும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. 3 தொகுதிகளிலும் இடது சாரிகள் - காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி அமைதி யாக வாக்குப்பதிவை எதிர்கொண்ட நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வழக்கம் போல வன்முறை சம்பவங்களை கட்ட விழ்த்துவிட்டன. திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக மோதலால் கூச்  பிகார் தொகுதியின் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி யுள்ளன. ஜல்பைகுரியில் வாக்குச் சாவடி அருகே மிக மோசமான அள வில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. கூச் பிகார், ஜல்பை குரி  ஆகிய 2 தொகுதியில் வன் முறை தொடர்பாக தேர்தல் ஆணை யத்திடம் 15க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தில் உள்ள 11 மக்களவை தொகுதி யில் பீஜப்பூருக்கு மட்டும் வெள்ளி யன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கலகாம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காய மடைந்ததாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. பீஜப்பூர் நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதி என்ற நிலையில், நக்சல்கள் இந்த குண்டு வெடிப்பை அரங்கேற்றி இருக்கலாம் என தகவல்  வெளியாகியுள்ளது.

;