மும்பை,பிப்.21- மகாராஷ்டிராவில் பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் மீண்டும் முட்டை சேர்க்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கக்கூடாது என சங்க்பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி அம்மாநில அரசு இனி பள்ளிகளில் முட்டை வழங்கப்படாது என அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது, குறிப்பாக மருத்துவர்கள், பெற்றோர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் தங்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இதனால் இந்த அறிவிப்பைத் திரும்பப்பெறுவதாக அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.