states

img

ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் நாப்கின் குறித்து கேள்வி எழுப்பிய மாணவிக்கு உதவ முன்வந்த நிறுவனம்

பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்க முடியாத என்று கேள்வி எழுப்பிய மாணவிக்கு, ’வெட் அண்ட் டிரை பெர்சனல் கேர்’  என்ற நிறுவனம்  கல்வி உதவி மற்றும் ஓராண்டுக்கான சானிட்டரி நாப்கின்களை வழங்க முன்வந்துள்ளது.

பீகார் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ரா. பாட்னாவில் நடைபெற்ற `அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்’ என்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். அப்போது, அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையிலான சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியாதா?” என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அநாகரிகமான முறையில் ஐ.ஏ.எஸ் அதிகரி பதிலளித்தது நாடு முழுவதும் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ’வெட் அண்ட் டிரை பெர்சனல் கேர்’ என்ற நிறுவனம் அந்த மாணவிக்கு கல்வி உதவி மற்றும் ஓராண்டுக்கான சானிட்டரி நாப்கின்களை வழங்கி உதவ முன்வந்துள்ளது.
 

;