நேபாள நாட்டின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பயணிகளுடன் உத்தரப்பிரதேச மாநில பதி வெண்கொ ண்ட பேருந்து (UP FT 7623 )சென்று கொண்டு இருந்தது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மார்ஸ்யாங்டி பகுதியில் உள்ள ஐனா பஹாரா ஆற்றில் கவிழ்ந்து விபத்து க்குள்ளானது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்த னர். 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரு வதாக தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா தகவல் தெரிவித்துள் ளார். உயிரிழந்த 14 பேரும் உத்தரப்பிர தேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகினாலும், உத்தரப்பிர தேச அரசு இதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.