states

img

பாஜக எம்.பி. வருண் காந்தி வாக்குமூலம் வேலையின்மையால் இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்!

புதுதில்லி, டிச. 3 - அரசு வேலைவாய்ப்பு அருகிப் போனதால், இந்திய இளைஞர்கள் மத்தி யில் விரக்தி மனநிலையில் இருப்பதாக பாஜக எம்.பி.யான வருண் காந்தியே வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் காந்தி - மேனகா காந்தி தம்பதியின் மகனுமான வருண் காந்தி பாஜக எம்.பி.யாக இருந்தாலும், அண்மைக் காலமாக மோடி அரசின் வேளாண் சட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள், மத வெறி அரசியலுக்கு எதிராக துணிச்ச லாக கருத்துக்களை வெளியிட்டு வரு கிறார். “விவசாயிகளுக்கு எதிராக ஊழல்,  கொடுமை, சுரண்டல் நடந்திருப்பது தெரிய வந்தால், ஒன்றிய அரசுக்கு முன் கையை கட்டிக்கொண்டு இருக்க மாட்டேன்” என்றும், “வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெற்றால் மட்டும் போதாது, லக்கிம்பூர் கெரியில் நடந்த  படுகொலைக்கு காரணமான பாஜக-வினரை தண்டிக்க வேண்டும். தில்லி  போராட்டக் களத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவிக்க வேண்டும்” என்றும் மோடி அரசை வலி யுறுத்திய  வருண் காந்தி, “மகாத்மா காந்தியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்சேவை புகழ்பவர்கள் இந்தியாவையே இழிவு படுத்துகிறார்கள்” என்றும் கருத்துக் களை வெளியிட்டார்.

இந்நிலையில்தான் வேலையின்மை பிரச்சனை குறித்தும் தற்போது அவர் டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். “கிராமப்புறங்களிலுள்ள சாதாரண இளைஞர்களுக்கு அரசு வேலை மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது. ஆனால், அரசு முன்பு இருந்ததை விட  குறைவானவர்களையே பணியில் அமர்த்துகிறது. சொல்லப்போனால் அரசு வேலைவாய்ப்புகளே இல்லை. அப்படி வேலைவாய்ப்பு இருந்தாலும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி விடுகிறது. ஒருவேளை தேர்வு நடந்தா லும், பல ஆண்டுகளாக தேர்வு முடிவு வெளியாவது இல்லை அல்லது ஊழல் காரணமாக தேர்வு ரத்து செய்யப் படுகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் இளைஞர்கள் பொறுமையாக இருப்பது? அவர்கள் மனதில் விரக்தி மனப்பான்மை குடி கொண்டு விட்டது” என்று வருண் காந்தி கூறியுள்ளார்.

;