states

img

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்

புனே மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து மாநாடு நடத்தின. அக்டோபர் 16 அன்று நடைபெற்ற இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்-எல்), பார்வர்டு பிளாக், சமாஜ்வாதி, முற்போக்கு குடி யரசு கட்சி, சத்யசோதக் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் லால் நிஷான் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. ஒருநாள் முன்னறிவிப்பு இருந்த போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாநாட்டி ற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இடதுசாரி கட்சிகள் மற்றும் சமாஜ்வாதி கட்சி யின் ஊழியர்கள் பொதுமக்கள் என 2000க்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். சிபிஎம் மகாராஷ்டிரா மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் உதய் நர்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மறைந்த சிபிஎம்  பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச் சார்யா, அதுல் குமார் அஞ்சன் (சிபிஐ), மீனாட்சி  பாட்டீல் (பார்வர்டு பிளாக்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு சோலாப் பூரின் பிரஜா நாட்டிய மண்டலத்தின் புரட்சிகர பாடல்களுடன் மாநாடு தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே (சிபிஎம்), தஹானு எம்எல்ஏ வினோத் நிகோல் (சிபிஎம்), சுபாஷ் லாண்டே (சிபிஐ), ஜெயந்த் பாட்டீல் (பார்வர்டு பிளாக்), அஜித் பாட்டீல் (சிபிஐ (எம்-எல்)), கிஷோர் தமலே (சத்யசோதக் கம்யூனிஸ்ட் கட்சி), ஷியாம் கெய்க்வாட் (முற்போக்கு குடியரசுக் கட்சி), மேதா தாட்டே (லால் நிஷான் கட்சி), அனிஸ்  அகமது (சமாஜ்வாதி) உள்ளிட்டோர் மாநாட்டில் உரையாற்றினர்.  மாநாட்டில் 7,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள முற்போக்கு இலக்கிய புத்தகங்கள் விறுவிறுப்பாக விற்பனையாயின. அதில் சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் சிபிஐ(எம்) மாநில மராத்தி வார இதழான ‘ஜீவன்மார்க்’ சிறப்பு இதழும் அடங்கும்.

பாஜகவை வீழ்த்த தீர்மானம்

இந்த மாநாட்டில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
1. மாநாட்டின் முதன்மை நோக்கம் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி - தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்துவதை உறுதி செய்வதாகும். 
2.மகா விகாஸ் அகாதி - இந்தியா கூட்டணி, அனைத்து துறைகளிலும் மக்கள் சார்பான மாற்றுக் கொள்கைகளை தெளிவாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். 
3.முற்போக்குக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் உள்ளடங்கிய அணுகுமுறையை  மகா விகாஸ் அகாதி கடைப்பிடித்து அவர்களுக்கு உரிய பங்கை வழங்க வேண்டும். பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கிய மாற்று மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்காளர்களுக்கு அறிவித்து மற்ற கட்சிகளுக்கு தகுதிக்கேற்ப தொகுதி பங்கீடு நடத்தப்பட வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹரியானா போல வேண்டாம் : காங்கிரஸ் கட்சிக்கும் வேண்டுகோள்

நிறைவுரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் அசோக் தாவ்லே பேசுகையில், “ ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை தவிர்த்து  ஹரியானாவில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றாமல், மீண்டும்  பாஜகவுக்கு ஆட்சி அரியணையை வழங்கியது.  அதனால் ஹரியானா போல மகாராஷ்டிரா விலும் காங்கிரஸ் கட்சி செயல்படக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மகா விகாஸ் தலைமை கோரியபடி 12 இடங்களுக்கான பட்டி யலை ஒப்படைத்த போதிலும், மேற்கொண்டு எந்த விவாதமும் இல்லை. அதனால் மகா  விகாஸ் கூட்டணியில் தலைமை பொறுப்பில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்),  சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கோரிக்கை விடுக்கிறது. சிபிஎம், கட்சி யின் சிட்டிங் தொகுதியான தஹானுவில் போட்டி யிடும். 34 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியால் பல இடங் களில் நல்ல வாக்குகளைப் பெற முடியும்.  அதனால் குறைந்தபட்சம் 20 இடங்களையாவது மகா விகாஸ் கூட்டணி மற்ற கட்சிகளுக்கு வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.