states

img

14 மணி நேர வேலையால் மகளின் குழந்தை பருவத்தை இழந்தேன்

நாடு முழுவதும் டாப் டிரெண்ட் ஆகும்  பெண் கணக்கு தணிக்கையாளரின் வீடியோ

பெங்களூரு இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் வாரத்திற்கு 70 மணிநேர வேலை வலி யுறுத்தலுக்குப் பின், கடந்த வாரம் எல் அண்ட்  டி நிறுவனர் எஸ்.என்.சுப்பிரமணியன், “மனைவி யுடன் பொழுதை கழிக்காமல் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்” என கூறினார். எஸ்.என்.சுப்பிரமணியனின் பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், நீது மொஹாங்கா என்ற பெண் கணக்கு தணிக்கையாளர் (சிஏ) 14 மணி நேர வேலையால் மகளின் குழந்தை பருவத்தை  இழந்தேன் என வீடியோ வெளியிட்டு எஸ்.என்.சுப்பிரமணியனின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  தொடக்கக் காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் நீது மொஹாங்கா வெளி யிட்டுள்ள வீடியோவில், “வாரத்துக்கு 90 மணி  நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி தலைவர் கூறியதைக் கேட்டேன். வீட்டில் என்னதான் செய்யப் போகிறீர்கள் என்று தனது ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி னார். 10 ஆண்டுக்கு முன்பு நானும் அப்படித்தான் இருந்தேன். தினமும் 14 மணி நேரம் வேலை  செய்தேன். இப்படி வேலை செய்வது கவுரவ மாகவும் இருந்தது. அதிகாலை 3 மணிக்கு மின்னஞ்சலுக்கு பதில் அளித்திருக்கிறேன். ஆனால் என் மகள் முதல் காலடி எடுத்து வைத்தது முதல் அவளுடைய குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தவறிவிட்டேன். என்  மகள் 5 வயதில் என் குடும்ப உறுப்பினர்களை ஓவியமாக வரைந்தாள். அதில் நான் இல்லை. இதுகுறித்து அவளுடைய ஆசிரியர் கேட்டபோது, ‘என் அம்மா எப்போதும் அலு வலகத்தில்தான் இருப்பார்’ என கூறி யிருக்கிறாள். அந்தப் படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நினைவுப் பொருளாக அதை வைத்திருக்கவில்லை. வெற்றிக்கு பதில் அதன் தாக்கத்தை அளவிட வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக அதை வைத்திருக்கிறேன். ஒரு வாரத்தில் 55 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும்போது செயல் திறன் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பாதிக்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும் படைப்பாற்ற லையும் இழக்க நேரிடுகிறது” என அவர் கூறினார். தனியார் நிறுவனங்கள் அதிர்ச்சி நீது மொஹாங்காவின் வீடியோ நாடு முழுவதும் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. இந்த டிரெண்டிங்கில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, எல் அண்ட் டி நிறுவனர் எஸ்.என்.சுப்பிரமணியனை நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்கள் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் வேலைநேரம் மற்றும் வேலைப்பளு தொடர்பாகவும் வீடியோ  வெளியிட்டு வருகின்றனர். இதனால் தங்களது  நிறுவனங்களின் லாப நோக்கம் உடைந்து விடுமோ? என்ற அச்சத்தில்  தனியார் நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.