states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஆர்எஸ்எஸ் - பாஜக உரசல்கள் நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் ஆட்டம் போல உள்ளது. பாஜக என்பது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கரம். இரு அமைப்புகளின் நோக்கமும் ஒன்றே! இந்தியா எனும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலான குடியரசை சகிப்புத்தன்மையற்ற எதேச்சதிகார பாசிச இந்து ராஷ்ட்ராவாக மாற்ற வேண்டும் என்பதே நோக்கம். இது அவர்களிடையே உள்ள வேலைப்பிரிவினை. பாரத் எனும் இந்தியாவை பாதுகாக்க விழிப்புணர்வு டன் இருக்க வேண்டியுள்ளது.  மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று சில நாட்களிலேயே ராய்ப்பூர், அலிகார், மண்டாலா, அக்பர் நகர், நாகன், சங்கம் விகார் ஆகிய இடங்களில் இஸ்லாமிய சிறுபான்மை மக்களை குறி வைத்து இந்துத்துவா குண்டர்களின் தாக்குதல்கள் நடந்துள்ளன. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த அட்டூழியத்தை ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டம் மேலும் தீவிரப்படுத்துகிறது. அதை எதிர்த்து வலுவாக போராட வேண்டியுள்ளது.

;