states

img

விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்புக்கு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுதில்லி, டிச.8- விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, வேளாண் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு வேராக இருப்பது மத்தியில் ஆளும் மோடி அரசின் அகங்காரம், தோல்விகள்தான் காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். “பணவீக்கம், வேலையின்மை, வேளாண் சிக்கல்கள், சீனாவின்ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு வேராக இருப்பது அனைத்தும் ஒன்றுதான். மோடி அரசின் தோல்விகள், அகங்காரம், நண்பர்கள் மீதான அன்புதான் காரணம். அநீதிக்கு எதிராக அனைவரும் சேர்ந்து ஒருசேர குரல் எழுப்புவோம்.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நாங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம். மக்களின் எண்ணங்களை, குரல்களை அந்த அரசுகள் காது கொடுத்து கேட்கின்றன. ஆனால் மோடி அரசு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவில்லை” என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

;