states

img

இந்தி மொழி பள்ளிகளை உருவாக்க முடியவில்லை

ராஜஸ்தானில் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 114 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வ ராக பஜன்லால் சர்மா பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வரும் முன்னர் பாஜக பல்வேறு உத்தரவாதங்களை அறி வித்தது. அதில்,100 நாட்களில் ஆசிரியர் இடமாறுதல் கொள்கை, ஆங்கில வழி பள்ளிகளை இந்தி மொழியாக மாற்ற நடவடிக்கை, பள்ளிகளில் செல்போ னுக்கு தடை உள்ளிட்டவை முக்கிய மானது ஆகும்.  இந்நிலையில், “ஆங்கில வழி பள்ளி களை இந்தி மொழி பள்ளிகளாக மாற்ற  முடியவில்லை. அதே போல மாநி லத்தில் புதிதாக இந்தி பள்ளிகளை உரு வாக்க முடியவில்லை. பல்வேறு குழப்பங் களால் ஆசிரியர் இடமாறுதல், பள்ளி களில் செல்போன் தடை உள்பட விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறப்படுகிறது” என ராஜஸ்தான் பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த அறி விப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளன.

ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை

“ராஜஸ்தானில் யூ-டர்ன் ஆட்சியை நடத்தி வருகிறது பாஜக. அதனால் ராஜஸ்தானில் எந்த திட்டமும் ஒரே முடிவில் உறுதியாக இருக்காது. மாநி லத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக மோசமாக நிகழ்ந்து வரு கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை  எடுக்காமல் செல்போன் மூலம் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் இருப்பிடத்தை துணை அதிகாரிகள்  மூலம் அரசு கண்காணிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இது மிக மோசமானது ஆகும். அதனால் ராஜஸ்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா கூறினார்.