states

img

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் 92 பேரில் 63 பேர் கோடீஸ்வரர்கள்!

புதுதில்லி, மார்ச் 16- பஞ்சாப் சட்டப்பேரவை யில், இந்தமுறை முன்னெப் போதும் இல்லாத அள விற்கு, அதிகமான கோடீஸ் வர எம்எல்ஏ-க்கள் இடம்பெற் றுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது பஞ்சாப் சட்ட மன்றத்திற்கு தேர்வாகியுள்ள எம்எல்ஏ-க்களில் 75 சதவிகி தம் பேர் கோடீஸ்வரர்கள். அதி லும் குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் 92 எம்எல்ஏ-க்களில் 63 பேர் கோடீஸ்வரர்கள் என் பது தெரியவந்துள்ளது. இதே போல, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ள 18 எம்எல்ஏக் களில் 17 பேரும், அகாலி தளம் சார்பில் வெற்றிபெற்றுள்ள 3 பேரும், பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ள 2 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றி பெற் றுள்ள ஒருவரும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் கோடீஸ் வரர்கள். இந்த முறை தேர்வாகி யுள்ள 117 எம்எல்ஏ-க்களில் 33.33 சதவிகிதம் எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 5 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளது.

23.08 சத விகித எம்எல்ஏ-க்களுக்கு ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 5 கோடி வரையும், 27.35 சதவிகித எம்எல்ஏ-க்களுக்கு ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 2 கோடி வரையும், 11.97 சதவிகித எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 10  லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை யும் சொத்து உள்ளது. 4.27 சத விகித எம்எல்ஏ-க்களுக்கு மட் டும்தான் ரூபாய் 10 லட்சத்திற் கும் குறைவான சொத்துக்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 117 எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 10.45 கோடியாக உள்ளது. இதில்  ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் 92 பேரின் சராசரி சொத்து மதிப்பு மட்டும் 7.52 கோடி. அத்துடன், கடந்த 2017-இல் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்வான எம்எல்ஏ-க்களோடு, ஒப்பிடும்போது, இந்தமுறை தேர்வான எம்எல்ஏ-க்கள்  மூன்று மடங்கு அதிகமான குற் றப்பின்னணி கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.