states

img

முன்னாள் விஞ்ஞானி சோபி ஜாங் குற்றச்சாட்டு பாஜகவின் போலிநெட்வொர்க்கை நீக்காமல் முகநூல் பாரபட்சம் காட்டியது!

புதுதில்லி, அக்.23- கடந்த 2019 தில்லி தேர்தலின் போது, போலி கணக்குகளை நீக் கும் விவகாரத்தில் முகநூல் நிறு வனமானது பாரபட்சமாக நடந்து கொண்டதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தரவு விஞ்ஞானியும் சமூகநல ஆர்வலருமான சோபி ஜாங் குற்றம் சாட்டியுள்ளார்.  கடந்த 3 ஆண்டுகளாக முக நூல் நிறுவனத்தில் பணியாற்றியவ ரான சோபிஜாங் இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  “கடந்த 2019-ஆம் ஆண்டு தில்லி தேர்தலின்போது, முகநூலில் 4 போலி நெட்வொர்க்குகள் இருந் தன. தலா இரண்டு என்ற எண் ணிக்கையில் பாஜக மற்றும் காங்கி ரஸ் கட்சிகள் அதனை நிர்வகித்து வந்தன. இவற்றில் 3 நெட்வொர்க்கு களை நீக்கி விட்டோம். 4-ஆவது நெட் வொர்க்கை நீக்க முயன்றபோது, அது பாஜக எம்.பி.யின் முகநூல் கணக்கோடு இணைக்கப்பட்டு உள் ளது என்பதை அறிந்தோம். இத னால் அந்த நெட்வொர்க்கை எங்க ளால் எதுவும் செய்ய முடியவில்லை.  கடந்த 2020-ஆம் ஆண்டு கூட ஆயிரக்கணக்கான போலி நெட்வொர்க்குகளை நாங்கள் கண்டு பிடித்தோம். அவை ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவான செய்திகளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட் டது என்பதை அறிந்தோம்.

அது போல் சில கணக்குகள் தங்களை பாஜக ஆதரவாளர்கள் என தவறாக சித்தரித்து பயன்படுத்தப் பட்டவை யாகவும் இருந்தன.  5-ஆவது போலி நெட்வொர்க் கூட கடந்த ஜனவரி மாத இறுதியில் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் பாஜக எம்.பி.க்கு சொந்தமான கணக்கை மட்டும் எங்களால் நீக்க முடியவில்லை.  பணக்காரர்கள், அதிகாரமிக்க வர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என இருந்தால் அங்கு ஜன நாயகம் இருக்காது என்பதற்கு இது தான் உதாரணம்” என்று அந்த பேட்டி யில் சோபிஜாங் கூறியுள்ளார். இதனிடையே, சோபி ஜாங்கின் குற்றச்சாட்டுகளை முகநூல் நிறு வனம் மறுத்துள்ளது. “சட்டவிரோத செயல்பாடுகளுடன் தொடர்புடைய 150-க்கும் மேற்பட்ட நெட்வொர்க்கு களை நாங்கள் ஏற்கெனவே நீக்கி விட்டோம். சட்டவிரோத செயல்பாடு களை ஒடுக்குவதுதான் எங்கள் முதல் பணியாகும். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த பிரச்ச னைகளை தீர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என முகநூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

;