பெண் தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜனை மோசமான வகையில் பாஜக அவமதித்திருக்கும் நிலையில், “நாரி சக்தி; பெண்கள் தெய்வம் என்பதெல்லாம் பசப்புதான்! ஒரு தலைவரை அதுவும் பெண்தலைவரை இப்படித்தான் நடத்துவீர்களா?” என்று மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.