states

img

பில்கிஸ் பானு வழக்கு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுதில்லி, மார்ச் 27 - பில்கிஸ் பானு கும்பல் வல்லுறவு வழக்கின் குற்ற வாளிகள் 11 பேர் முன் கூட்டியே விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் சுபா ஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பத்திரிகை யாளர் ரேவதி லால், முன் னாள் ஐபிஎஸ் அலுவலர் மீரான் சாதா போர்வான்கர் உள்ளிட்டோரும், இந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு, தனி அமர்வை ஏற்படுத்துவதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கடந்த வாரம் உறுதியளித்து இருந்தார்.  அதன்படி பில்கிஸ் பானு வழக்கை, நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்க ளன்று விசாரித்தது. அப்போது,  பில்கிஸ் பானு வழக்கில் தண்ட னை பெற்ற 11 பேரை விடு விக்க மற்ற வழக்குகளில்  பின்பற்றும் விதிமுறைகளை தான் குஜராத் அரசு பின் பற்றியதா? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், இதற்கான அனைத்து ஆவணங்களையும் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டு, விசாரணை யை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;