கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீர ரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் தெண்டுல்கர் கேரள குண்டு வெடிப்பிற்கு டுவிட் டர் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரி வித்தார். இதற்கு பலதரப்பில் கண்ட னம் குவிந்து வரு கிறது. காரணம் 6 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூர் குறித்து வாய் திறக்காத சச்சின், தனிநபர் மற்றும் உள்ளூர் தேவாலய பிரச்சனையான கேரள குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்ததற்கு, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பி வரு கின்றன. அரசியல் தெரியாத இளம் கிரிக்கெட் ரசிகர்கள் கூட சச்சின் பாஜக வின் கைப்பாவையாக மாறிவிட்டார் என மீம்ஸ் செய்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கடந்த 2012இல் சச்சின் தெண்டுல்கரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார். இவரது எம்பி பதவிக்காலம் 2018இல் நிறைவ டைந்த நிலையில், மீண்டும் மாநிலங்க ளவை உறுப்பினர் பதவியை பெற இவ் வாறு பேசி வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.