states

மே 13 முதல் நாகையிலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து

நாகப்பட்டினம், ஏப்.28- மே 13 முதல் நாகப்பட்டினத்திலிருந்து  இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுகிறது.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம்  தேதி இந்தக் கப்பல் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பயணக் கட்டணம் அதி கமாக இருந்ததால் பயணிகள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. குறைவான பயணிகளைக் கொண்டு நீண்ட காலம் இச்சேவையை வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. மேலும் புயல், கடும் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால்  கடந்த ஆறு மாதகாலமாக கப்பல் பயணச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்கு வரத்து தொடங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. மே 13ஆம் தேதி சிவகங்கை என்ற பெயர்  கொண்ட மற்றொரு கப்பல் நாகை துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்கப்படுகிறது. ஏற்கெனவே இயக்கப்பட்ட செரியாபாணி என்ற கப்ப லுக்கு மாற்றாக புதிய கப்பல் வந்துள் ளது. இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133  இருக்கைகளும் மேல் தளத்தில் 25 இருக்  கைகளும் உள்ளன. கீழ்தள இருக்கைக்கு 5 ஆயிரம் ரூபாயும் மேல்தள சிறப்பு வகுப்புக்கு 7 ஆயிரம் ரூபாயும் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும். தமிழகத்தில் கோடை விடுமுறை வரு வதால் அதிகளவில் பயணிகள் கப்பல் பய ணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

;