states

img

ஜூலை 21இல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 அன்று தொடங்குகிறது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் அடுத்த நாளான  ஜூலை 23 அன்று 18ஆவது மக்களவையின் முதல் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது. பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் சமர்ப்பிக்கவுள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு இது 7ஆவது பட்ஜெட் ஆகும். மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் பட்ஜெட் சமர்ப்பித்தல் தொ டர்பாக ஆலோசனை நடத்த ஜூலை 21 அன்று காலை 11 மணிக்கு நாடாளு மன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடை பெறும் என நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறி வித்துள்ளார்.