states

img

13 மாநிலங்களை இருளில் தள்ளும் மோடி அரசு

புதுதில்லி, ஆக.19- தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் தங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றிய பாஜக அரசு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதித்தது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, இந்த 13 மாநிலங்களும் பாக்கி வைத்திருப் பதாகவும், இந்த நிலுவைத் தொகை செலுத்தவில்லை என்றும் கூறி, மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், ‘மின்சாரத் திருத்தச் சட்டம் 2022’-இல் கூறப்பட்டுள்ள விதிகளைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசின் இந்த தலையீடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஒன்றிய மின்சாரத்துறை அமைச்ச கத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (Power System Operation Corporation Limited - POSOCO) செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறு வனங்கள் (power generating com panies - Gencos) மூலம் மாநிலங்களில்  உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு (Power Distribution Companies- DISCOMS) மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறும் மின்சாரத்திற்கு ‘டிஸ்காம்ஸ்’ சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு (gencos) பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள ‘டிஸ்காம்ஸ்’ சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தா மல் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீர் என 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சேர்த்து மொத்தம் ரூ.5,085 கோடியை பாக்கியாக வைத்துள்ளதாக தெரிகிறது. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,380 கோடி, தமிழ்நாடு ரூ.926.16 கோடி, கர்நாடகா ரூ.355.2 கோடி, மகா ராஷ்டிரா ரூ.381.66 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.229.11 கோடி, ராஜஸ்தான் ரூ.500.66 கோடி, ஆந்திரா ரூ.412.69 கோடி, ஜார்க்கண்ட் ரூ.214.47 கோடி என நிலுவைத் தொகையை செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.

7 மாதங்களுக்கும் மேலாக டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது; அந்த டிஸ்காம்களின் மின்வர்த்தகத்திற்கும் தடை விதிக்க முடியும் என்ற மின்சார திருத்தச் சட்டம்- 2022-இன் புதிய லேட் பேமெண்ட் சர்சார்ஜ் (LPS) விதிகளின் கீழ் ஒன்றிய அரசு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த 13 மாநிலங்களிலும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, 5ஜி அலைக் கற்றையை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட்டது. பார்தி ஏர்டெல் லிமிடெட், தொலைத்தொடர்புத் துறை  ரூ.8,312.4 கோடியும், அதன் போட்டி யாளரான ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் லிமிடெட் முதல் ஆண்டு தவணை யாக ரூ.7,864 கோடியும், வோடபோன் ஐடியா ரூ.1,679 கோடியும் மட்டுமே செலு த்தி அலைக்கற்றையை வாங்கின. மீதி யுள்ள தொகையை 20 ஆண்டுகளுக்கு தவணை முறையில் செலுத்த உள்ளன. இவ்வாறு தனியார் முதலாளிகள், அவர்கள் செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியை செலுத்த 20 ஆண்டுகள் சலுகை வழங்கியுள்ள மோடி அரசு, 13 மாநில அரசுகள் செலுத்த வேண்டிய வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்காக, அந்த மாநிலங்களை தற்போது இருளில் தள்ளிவிடும் வேலையைச் செய்திருக்கிறது.

;