states

img

வெனிசுலாவில் பாசிச எதிர்ப்பு மாநாடு வி.சிவதாசன் எம்.பி.க்கு மோடி அரசு அனுமதி மறுப்பு

அதிகரிக்கும் பாசிச தாக் குதல்கள் குறித்து விவாதிக்க தென் அமெரிக்க நாடான வெனி சுலாவில் நடை பெறும் உலக நாடாளுமன்ற அமைப்பில் பங்கேற்க கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். வி.சிவதாசனுக்கு மோடி அரசு அனுமதி மறுத்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  வெனிசுலா நாட்டில் உலக நாடாளு மன்ற மன்ற அமைப்பு மாநாடு நவம்பர் 4 முதல் 6 வரை நடைபெற உள்ளது. உல கில் அதிகரிக்கும் பாசிசத்தை ஒற்றுமை யாக எதிர்கொள்வது என்பதே பாசிச எதிர்ப்பு மாநாட்டின் விவாதப் பொருளா கும். எப்சிஆர்ஏ (உலக நாடாளுமன்ற அமைப்பு) அனுமதி உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தாலும் அரசியல் ரீதியிலாக அனுமதி வழங்கா தது ஜனநாயகத்தை பாஜக புறக் கணிப்பதாக வி.சிவதாசன் எம்பி கூறி னார். பயண அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.