states

img

கும்பமேளா நிகழ்வு ‘5 ஸ்டார்’ நிகழ்ச்சியாக மாற்றம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) 12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்ப மேளா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 13ஆம்  தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம்  தேதி வரை 45 நாட்கள் இந்த கும்ப மேளா நிகழ்வை  “5 ஸ்டார்” கலாச்சார  நிகழ்ச்சியாக மாற்றி வருவதாக சாமியார்  கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய உதாசின சங்கத்  அமைப்பின் தலைவர் மஹாந்த் தர்மேந் திர தாஸ் கூறுகையில்,”அலகாபாத்தில் நடைபெறுவது கும்பமேளா நிகழ்வு; “5 ஸ்டார்” ஹோட்டல் நிகழ்ச்சி அல்ல  என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  விஐபி சேவை, வசதி வேண்டுமென நினைப்பவர்களுக்கான இடம் இது வல்ல” என அதிருப்தியை வெலிப்படுத்தி யுள்ளார். இதேபோல பல சாமியார்கள் கும்பமேளா நிகழ்வின் விஐபி வசதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஐபி வசதியின் காரணமாக தான் சமீ பத்தில் மவுனி அமாவசை அன்று கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

4ஆவது முறையாக தீ விபத்து

பாதுகாப்பு ஏற்பாடுகள் குளறுபடி கார ணமாக கும்பமேளாவில் 4ஆவது முறை யாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஓம் பிர காஷ் ரேவா சன்ஸ்தான் அமைத்த கூடா ரத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு காரண மாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 10 நிமி டங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டது என்றா லும், கூடாரம் முற்றிலும் எரிந்தது. முன்ன தாக பிப்ரவரி 7 ஆம் தேதி கும்பமேளா  நகரின் செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்   யாருக்கும் காயம் ஏற்படாத நிலை யில், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமா யின. ஜனவரி 19 அன்று கும்பமேளா பகுதி யின் செக்டார் 19இல் எரிவாயு சிலிண்டர்  வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்  டது. 12 கூடாரங்கள் எரிந்து நாசமாகின. ஜனவரி 25 ஆம் தேதி, மகா கும்பமேளா கண்காட்சி பகுதியின் செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.