புதுதில்லி, செப்.1- தில்லி சட்டப்பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய முதல்வர் கெஜ்ரி வால், அதில் வெற்றி பெற றுள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேர வையில், கெஜ்ரிவால் தலை மையிலான ஆம் ஆத்மி கட் சிக்கு மொத்தம் 62 எம்எல்ஏக் கள் உள்ள நிலையில் அவர் களில் 58 பேர் நம்பிக்கை வாக் கெடுப்பில் கலந்து கொண்டு, கெஜ்ரிவால் அரசுக்கு ஆத ரவாக வாக்களித்தனர். பாஜக எம்எல்ஏ-க்கள் 8 பேரும் அவையில் இல்லாத தால், நம்பிக்கை தீர்மானத் திற்கு எதிராக யாரும் வாக்க ளிக்கவில்லை. இதனால், தில்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெ டுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர், தலா ரூ. 20 கோடி விகிதம் மொத்தம் 800 கோடிக்கு விலை பேசப்படு வதாகவும், தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக தொடர்ந்து பல இடை யூறுகளை செய்வதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி னார். அத்துடன், தாமாகவே முன்வந்து சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெ டுப்புக்கும் தயாரானார்.
அதன் படி கடந்த சில நாட்களாக நம்பிக்கை கோரும் கெஜ்ரி வால் அரசின் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியா ழக்கிழமையன்று தில்லி சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தில் நம்பிக்கை வாக் கெடுப்பைச் சந்தித்த அர விந்த் கெஜ்ரிவால் அதில் வெற்றி பெற்றுள்ளார். இதையொட்டி பேசிய கெஜ்ரிவால், தில்லியில் ‘ஆபரேசன் தாமரை’ தோல்வி அடைந்து விட்டதாக தெரி வித்தார். மேலும், அவைக்கு வராத 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக் களில் இருவர் வெளிநாடு களில் உள்ளதாகவும், ஒரு வர் சிறையில் உள்ளதாக வும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார். மற்றொருவர் சபாநாயகர் என்பது குறிப்பி டத்தக்கது. முன்னதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவையில் பதாகை களை ஏந்தி அமளியில் ஈடு பட்டதுடன், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் அர விந்த் கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரித்த பாஜக எம்எல்ஏக்கள் 5 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.