மகாராஷ்டிராவில் ரூ.20 கோடி அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டி ராவில் புதன்கிழமை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்த லுக்கு ஒரு நாள் முன்பாக, அதாவது செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரும், பாஜக தேசிய பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டே பால்கர் மாவட்டத்தின் விரார் நகரத்தில் உள்ள ஐந்து நட் சத்திர ஹோட்டலான விவாண்டா வில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த பொழுது பகு ஜன் விகாஸ் அகாதி தொண்டர் களால் பிடிபட்டார். சம்பவ இடத் தில் இருந்து ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ள தகவல் முத லில் வெளியாகியது. ஆனால் மொத் தம் ரூ.20 கோடி கைப்பற்றப்பட்ட தாக செய்திகள் வெளியாகியுள் ளன.
சிபிஎம் கண்டனம்
இந்நிலையில், பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே பணப்பட்டுவாடா செய்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநி லச் செயலாளர் டாக்டர் உதய் நார் கர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “மகா ராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக மும்பை அருகே உள்ள விரார் நகரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான விவாண் டாவில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.20 கோடி ரூபாயுடன் பாஜக தேசிய பொதுச் செயலா ளர் வினோத் தாவ்டே எதிர்க்கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப் பட்டு பிடிபட்டுள்ளார். தேர்தல் வர லாற்றில் இந்த சம்பவத்தை விட கேவலமானது வேறு எதுவும் இருக்க முடியாது. முன்னாள் மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலை வருமான வினோத் தாவ்டே மக்க ளின் ஆணையை திசை திருப்பு வதற்காக இந்த பணப்பட்டுவாடா பணியை மேற்கொண்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது.
பாஜக: ஆடம்பரம் - பணப்பட்டுவாடா
பாஜக பிரச்சாரத்தின் போது காட்டப்பட்ட பணத்தின் ஆடம்பர காட்சிக்கு இந்த பணப்பட்டுவாடா மேலும் ஒரு சான்றாக அமைந்துள் ளது. இந்த ஆடம்பர ஹோட்டலின் பல அறைகளில் கட்டுக் கட்டாக பணம் குவிந்து கிடந்ததும், அதில் வினோத் தாவ்டே பணக் குவிய லின் நடுவில் அமர்ந்திருந்ததும் சிசி டிவி கேமராக்களில் பதிவாகியுள் ளன. இந்த மிகவும் ஊழல் நிறைந்த சம்பவத்தின் மூலம் பாஜக கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பது மீண்டும் ஒரு முறை பகல் வெளிச்சம் போல் வெளிப்பட்டது.
குஜராத்தில் இருந்து பண டேங்கர்
சட்டமன்ற தேர்தல்களின் ஜன நாயக செயல்முறையை நசுக்கும் பனிப்பாறையின் ஒருமுனை மட் டுமே இந்த சம்பவம். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஏக் நாத் ஷிண்டே (சிவசேனா) மற்றும் அஜித் பவார் (தேசியவாத காங்கி ரஸ்) ஆகியோர் மாநிலத்தில் அரசி யலமைப்பு சட்டத்துக்கு புறம்பான முறையில் ஆட்சியைக் கைப்பற்றி யதைப் போல, தேர்தல் முழு செயல் முறையையும் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தின் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளனர். அதே போல மாநிலம் முழுவதும் குறிப்பாக தஹானு (பழங்குடி), கல்வான் (பழங்குடி) மற்றும் சோலாப்பூர் சிட்டி மத்திய தொகுதிகளில் பாஜக வின் பட்டுவாடா குறித்து சிபிஎம் ஊழியர்கள் புகார் தெரிவித்து வரு கின்றனர். குறிப்பாக குஜராத் எல்லையில் இருந்து தஹானு தொகுதிக்கு அருகில், டேங்கர்கள் நிறைய ரூபாய் நோட்டுகள் வருவதாகக் கூறப்படும் புகார்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை. பாஜக தலைமையிலான மகாயுதியின் கட்டண செய்திகள் மற்றும் பக்கம் நிறைய அருவருப்பான விளம்பரங் கள் கார்ப்பரேட் ஊடகங்களின் (கோடி மீடியா) அனைத்து பதிப்பு களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் முழு தோல்வி
தேர்தல் பிரச்சாரம் முடிவடை யும் தருணத்தில் வினோத் தாவ் டேவை பண குவியல்களுடன் கைப் பற்றியது தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அல்ல, ஒரு அரசியல் கட்சியின் செயல்பாட்டாளர்கள் தான் கைப்பற்றியுள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் முழு தோல்வியாகும். இப்போது மாநி லத்தில் நியாயமான தேர்தல் நடத் தப்படுவது குறித்த அனைத்து சந்தேகங்களையும் போக்குவதன் மூலம் தேர்தல் ஆணையம் இந்த சூழ்நிலைக்கு உயர வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த கேவல மான விவகாரத்தை தேர்தல் ஆணையம் முழுமையாக விசா ரித்து, பயம் மற்றும் பாரபட்சமின்றி தனது முழு அரசியலமைப்புச் சட் டத்தின் படி தீர்க்கமாகச் செயல் பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இந்த விஷயத்தில் தோல்வி ஏற்பட் டால், நரேந்திர மோடி தலைமையி லான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த தேர்தலில் அவ மானகரமான அடியை சந்தித்த அதன் பிம்பம் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேட்பாளர்களை கடத்திய பாஜக
பணப்பட்டுவாடா மூலம் தேர் தல் செயல்முறையை சீரழிப்பது போதாதென்று, தஹானு தொகுதி யில் போட்டியிடும் ஒரு வேட்பா ளரை பாஜக கடத்தியுள்ளது. எனி னும் தஹானு தொகுதியின் வேட்பா ளரும், எம்எல்ஏவுமான வினோத் நிகோலிடம் உறுதியான தோல்வி யை எதிர்கொள்ள நேரிடும் நிலை யில் உள்ளது. அங்கு வாக்குப்பதி வுக்கு ஒரு நாள் முன்பு ஒரு வேட்பா ளரை விலைக்கு வாங்கி, பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வற்புறுத்தியது. இந்நிகழ்வில் பல கோடி ரூபாய் கைமாறியிருக்க வேண்டும் என்பதால் இந்த ஊழல் குறித்து தேர்தல் ஆணையம் விசா ரணை நடத்த வேண்டும் என்று சிபிஎம் கோருகிறது. மாநிலத்தில் தற்போதைய தேர் தல் செயல்முறையை அரசியல மைப்புச் சட்ட ரீதியாக பாதுகாக்க முடியும் என்று வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டுமா என்ற முன் னெப்போதும் இல்லாத சோதனை யை தேர்தல் ஆணையம் எதிர் கொள்கிறது. அரசியலமைப்பால் வழங்கப்பட்ட தனது நெறிமுறை நம்பகத்தன்மையை நிரூபிக்க தேர்தல் ஆணையத்திற்கு இது ஒரு முக்கிய தருணம் ஆகும். ஜன நாயகத்தையும் அரசியலமைப்பை யும் அவமானப்படுத்துபவர் களுக்கு எதிராக தேர்தல் ஆணை யம் உடனடியாகவும் உறுதியாக வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் மகாராஷ்டிரா மாநி லக் குழு கோருகிறது” என அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.