states

img

புனேவை மிரட்டும் குய்லின்-பார்ரே தொற்று பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்று வட்டாரப் பகுதியில் குய்லின்-பார்ரே (ஜிபிஎஸ்) நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது வரை புனே மண்டலத்தில் குய்லின்-பார்ரே தொற்று பாதிக்கப்பட்டவர்க ளின் மொத்த எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. இதில் 20க்கும் மேற் பட்டோர் செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் புனே அருகே சோலாப் பூரில் 40 வயதுமிக்க ஒருவர் குய்லின்-பார்ரே தொற்றுக்குப் பலியானார். தொடர்ந்து வியாழக்கிழமை அன்று புனேவின் புறநகர் பகுதியான சின்ஹா காட் சாலையைச் சேர்ந்த 56 வயது பெண் பலியானார்.

3ஆவது பலி

இந்நிலையில், புனே மாவட்டம் சின்ச்வாட் அருகே 36 வயதுமிக்க டாக்சி ஓட்டுநர் ஜனவரி 21ஆம் தேதி நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 22ஆம் தேதி அவருக்கு குய்லின்-பார்ரே  தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இத்தகைய சூழலில் 8 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தும் வெள்ளிக் கிழமையன்று டாக்சி ஓட்டுநர் உயிரி ழந்தார். இதன்மூலம் புனேவில் குய்லின்- பார்ரே தொற்று நோய்க்கு உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் உயிரிழந்து இருப்பதாலும் 20க்கும் மேற்பட்டோர் செயற்கை சுவாசத்தில் உள்ளதாலும் குய்லின்-பார்ரே தொற்று பரவலால் மகாராஷ்டிர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

காரணம் இன்னும் தெரியவில்லை

மகாராஷ்டிரா மாநிலத்தில் குய்லின்- பார்ரே தொற்று புனே மற்றும் அதைச்  சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே  பரவி வருகிறது. மாசுபட்ட உணவு மற்றும்  தண்ணீரில் காணப்படும் கேம்பிலோபாக் டர் ஜெஜூனி என்ற பாக்டீரியாவே இந்த தொற்றுநோய்க்கான காரணம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி யுள்ளது. ஆனால் இந்த பாக்டீரியா காரண மாகவே குய்லின்-பார்ரே தொற்று பரவி வருகிறது என மகாராஷ்டிரா அரசு உறு தியாக தகவல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.