states

img

ஊடகத் துறையில் பாலின சமத்துவம் - நீதி குறித்து விவாதிக்கப்பட வேண்டும்

திருவனந்தபுரம் மற்றவர்களுக்கு நீதி கிடைக் கப் போராடும் பெண் பத்தி ரிகையாளர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் எதிர் கொள்ளும் அநீதியைப் புறக்கணிக் கக் கூடாது என்று கேரள சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.  நாடு முழுவதும் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்புடன் கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு அரசு முறையில் நடத்தப்படும் முதலாவது தேசிய பெண் பத்திரிகையாளர்கள் மாநாட்டை அமைச்சர் தொடங்கி (திருவனந்தபுரம்) வைத்து மேலும் பேசியதாவது: ஊடகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதி கரித்துள்ளது.

ஆனாலும் பெண் பத்திரிகையாளர்கள் ஊடக நிறுவ னங்களுக்குள்ளும் பொதுமக்க ளிடமிருந்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே, ஊடகத் துறையில் பாலின சமத்துவம் மற்றும் பாலின நீதி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். நாட்டின் பிரபல பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்கும் இந்த மன்றத்தில் இதுபோன்ற விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆடியோவிஷுவல் ஊடகங்க ளின் வருகையுடன், ஊடகத் துறை யில் பெண்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற் பட்டுள்ளது.

ஆனால் முக்கிய முடி வெடுக்கும் கட்டங்களில் பெண்க ளின் இருப்பு குறைவாகவே உள்ளது. சமூகத்தில் நடக்கும் அநீதி களை அம்பலப்படுத்தும் ஊடக ஊழியர்கள் தங்கள் பணியிடங்க ளில் உதவியற்றவர்களாக விடப் படக்கூடாது. எத்தனை ஊடக நிறு வனங்கள் பணியிடங்களில் சட்டப் பூர்வமாகத் தேவைப்படும் உள் குழுக்களைக் கொண்டுள்ளன என்பதை நாம் ஆராய வேண்டும். அனைத்து நிறுவனங்களும் மார்ச் 2025 க்குள் பணியிடங்களில் POSH  (பாலியல் வன்கொடுமை தடுப்பு)  சட்டத்தின் கீழ் உள் குழுக்களை உரு வாக்கி அவற்றை இணையதளத் தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை பத்து ஊடக நிறுவனங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவு செய்துள் ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் சுட்டிக்காட்டினார். கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஊடக ஆர்வலரான அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்துப் பேசினார்.

கே. கல்யாணி குட்டி  அம்மா, ஏ.வி. குட்டி அம்மா, யசோதா டீச்சர், ஹலிமா பீவி உள்ளிட்ட வர்களின் துணிச்சலான வரலாறு நம் முன் உள்ளது. இருப்பினும், பெண் பத்திரிகையாளர்களின் பங்களிப்புகளும் வரலாறும் போது மான அளவு ஆவணப்படுத்தப்பட் டுள்ளனவா என்பது சந்தேகமே. இந்த சூழ்நிலையில், பெண் பத்தி ரிகையாளர்களின் சங்கம் மிகவும் பொருத்தமானது. நாட்டில் அரசு மட்டத்தில் முதல் தேசிய மகளிர் ஊடக மாநாட்டை ஏற்பாடு செய்த தற்காக தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையை அமைச்சர் பாராட்டினார்.