states

‘5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு ஜிடிபி 9 சதவிகித வேகத்தில் வளர வேண்டும்!’

ஹைதராபாத், ஆக. 17 - இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொரு ளாதாரமாக வளருவதற்கு ஜிடிபி ஆண்டொன்றுக்கு 9 சதவிகித வளர்ச்சி வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பா ராவ் கூறியுள்ளார். தெலுங்கானா மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பில் சுதந்திர தின விழா நடை பெற்றது. இதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பாராவ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது இதனை அவர் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “2028-29ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர்  பொருளாதாரமாக மாற்ற வேண்டு மென பிரதமர் நரேந்திர மோடி  விரும்புகிறார். இதற்கு அடுத்த  ஐந்து ஆண்டுகளுக்கு ஜிடிபி 9 சத விகித வேகத்தில் தொடர்ந்து வளர  வேண்டும். அப்போது 2028-29 நிதி யாண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உரு வெடுக்கும். 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக வளருவதற்கு எட்டு  முக்கிய சவால்கள் இருக்கின் றன.

முதலீட்டை அதிகரிப்பது, உற் பத்தி திறனை மேம்படுத்துவது, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு களை உருவாக்குவது, வேளாண் உற்பத்தியை பெருக்குவது, பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாப்பது, சர்வதேச பாதிப்பு களை சமாளிப்பது, ஆட்சிமுறை யை மேம்படுத்துவது- ஆகிய வையே அந்த எட்டு சவால்கள் ஆகும். இலவசங்கள் குறித்து பிரதமர்  மோடி ஒரு விவாதத்தை உருவாக்கி யுள்ளார். இந்த நிலைக்கு எல்லா அரசியல் கட்சிகளுமேதான் காரணம். நாட்டிற்கு உபரியான பட்ஜெட் இல்லை என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உணர வேண்டும். எனவே, நிதி பாதுகாப்பு அவசியம்.கடன் வாங்கி இலவசங்கள் கொடுக்கும்போது தேர்வு செய்து கவனமாக கொடுக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு தேவை யில்லாத கடன் சுமையை ஏற்படுத்தக்கூடாது.” இவ்வாறு சுப்பா ராவ் பேசியுள்ளார்.

;