states

img

மகாராஷ்டிராவில் வெடி விபத்து : 8 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா அருகே ஜவஹர்நகரில் உள்ளது ஆயுதங்கள் தயாரிக்கும் வெடிமருந்து தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயத்துடன் பண்டாரா சுற்று வட்டார மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி சிகிச்சையில் இருந்த  மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள் ளது எனவும் பண்டாரா மாவட்ட நிர்வா கம் தகவல் தெரிவித்துள்ளது. படு காயத்துடன் சிகிச்சை பெறும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவு செய்திகள் வெளியாகியுள்ளன.