states

எல்லையில் பறந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

புதுதில்லி,டிச.18- பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்து மீறி பறந்த டிரோனை பாது காப்புப்படை சுட்டுவீழ்த்தி யது. டிசம்பர் 17 வெள்ளிக் கிழமை இரவு  11.10 மணி யளவில் ஃபெரோசேபூர் செக்டாரின் அருகே வன் என்ற  எல்லை நிலை உள் ளது. சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தப்பகுதியில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலை வில் கருப்பு நிறத்தில் ட்ரோன் ஒன்று பறந்தது.  இதைக் கவனித்த பாதுகாப்பு படை வீரர்கள் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர் என்று பாது காப்புப்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.