பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநி லத்தில் மது விலக்கை மிகக் கடுமையாக அமல் படுத்தி வருவதாக அவரை அவரே பாராட்டி வருகிறார். இந்நிலை யில், சட்டப்பேரவை வளாகத்திலேயே காலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது நிதிஷ் குமாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. “இது மிகவும் மோசமானது. இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? பேரவைத் தலைவர் அனுமதித்தால், இன்றைக்கே அனைவரையும் விசாரிக்க உத்தரவிடு வேன்” என்று நிதிஷ் கொந்தளித்துள்ளார். மேலும் விசாரணையை தலைமை செய லாளர், காவல்துறை தலைவர் ஆகி யோர் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.