பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங்கின் பெயர்
கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் முதலமைச்சரும், நிதி யமைச்சருமான சித்தராமையா வெள்ளிக்கிழமை அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர் உரையாற்றுகை யில், “பெங்களூரு சிட்டி பல்கலைக்கழ கத்தை டாக்டர் மன்மோகன் சிங் பெங்க ளூரு சிட்டி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். கல்வி, பொரு ளாதாரத்துக்கு அவர் செய்த பங்க ளிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட் டன. அவரின் பெயரைப் பல்கலைக்கழ கத்துக்கு வைப்பது அவருக்கு கர்நாட கம் செய்யும் அஞ்சலியாக கருதப்படு கிறது” எனக் கூறினார்.