states

img

சூடான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை கைதுசெய்த ராணுவம்

கார்தோம், ஜூன் 27 - சூடான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் அமல் எல் ஜீன்னை ஜூன் 23 அன்று சூடான் ராணுவ உளவுத்துறை கைது செய்துள்ளது. சூடான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினரான ஃபாத்தி எல்ஃபாட்லின் இது குறித்து தெரிவித்த போது, தோழர் அமல் யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப் பட்டுள்ளார். மேலும் அவரை சந்திக்க முயற்சி  செய்த தோழர்கள், வழக்கறிஞர்கள், குடும்ப  உறுப்பினர்கள் என யாரையும் ராணுவம் அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தோழர் அமல் தொடர்ந்து மருத்துவ உதவி யுடன் தான் தனது பணிகளை மேற்கொள் கிறார். இந்நிலையில் அவருக்கு தொடர் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அதனை  ராணுவம் உறுதி செய்வதற்காக மருத்துவர் ஒருவர் பார்க்க அனுமதிப்பதுடன் அவ ருக்கு தடையின்றி மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வும் வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சூடான்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் அவருக்கு எந்த ஆபத்து நேர்ந்தா லும் அதற்கு ராணுவமும் உளவுத்துறையும் தான் முழுப் பொறுப்பு எனவும் எச்ச ரித்துள்ளது. கடந்த ஓராண்டாக நடைபெறும் சூடான் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு கம்யூ னிஸ்ட் கட்சியும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டில் உள்ள அதி விரைவுப் படை கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தை தாக்கி ஆக்கிரமித்துள்ளது. மேலும் அல்- மேதான்  என்ற அக்கட்சி பத்திரிகையின் ஆசிரியர், அதிவிரைவுப் படையால் கடத்தப்பட்டுள்ளார். 

;