states

img

குற்றவாளிகளின் முன்கூட்டிய விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடினார் பில்கிஸ் பானு!

புதுதில்லி, நவ. 30 - 2002 குஜராத் கலவரத்தின் போது தன்னைக் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன் மற்றும் தனது குடும்பத்தினரை படுகொலை செய்து, ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.  குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தில், குஜராத் அரசை முடி வெடுக்க அனுமதிக்கும் உச்ச நீதி மன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதி ராக மறுஆய்வு மனுவையும் பில்கிஸ் பானு தாக்கல் செய்துள்ளார். புதனன்று காலை உச்ச நீதி மன்றம் கூடியதும், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு,  பில்கிஸ் பானு சார்பில் வழக்கறிஞர் ஷோபா குப்தா ஆஜரானார். அவர், பில்கிஸ் பானுவின் மனுக்களைத் தாக்கல் செய்தார். 

அப்போது, பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளை விடு தலை செய்ய குஜராத் அரசுக்கு அதி காரம் உள்ளது என்று தீர்ப்பளித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை யிலான அமர்வு, தற்போது அரசியல் சாசன வழக்குகளை விசாரித்து வரு வதால், இந்த விஷயத்தை இப்போது விசாரிக்க முடியுமா? என தெரிய வில்லை என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார். “முத லில் மறு ஆய்வு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். அதற்கு நீதிபதி ரஸ்தோகி வரட்டும்” என்றார்.  இந்த வழக்கை திறந்த நீதிமன்றத் தில் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஷோபா குப்தா கூறிய போது, ​“அதை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும்” என்றும் டி.ஒய்.  சந்திரசூட் பதிலளித்தார். இன்று (நவம்பர் 30) மாலை இந்த விவகாரம்  குறித்து ஆய்வுசெய்த பிறகு, வழக்கை பட்டியலிடுவது குறித்து முடிவு எடுப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.  இதையடுத்து பில்கிஸ் பானு தொடர்ந்துள்ள மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜ ராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா  ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப் பட்டது. சங்-பரிவாரங்களும், பாஜக-வினரும் இனப்படுகொலையில் ஈடுபட்டனர். சுமார் 2 வாரங்களுக்கு நீடித்த  இந்த வன்முறையில், 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கள்- குழந்தைகள், பெண்கள், முதி யவர்கள் என ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டனர். 20 ஆயிரம் இஸ்லாமியர் களின் வீடுகள் மற்றும் கடைகள், 360  மசூதிகள் அழிக்கப்பட்டன. ஒன்றரை லட்சம் இஸ்லாமியர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இவ்வாறு உயிர்ப்பலியானவர் குடும்பங்களில் அகமதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானுவின் குடும்பமும் ஒன் றாகும். 2002 மார்ச் 3-ஆம் தேதி வன்முறையாளர்களுக்கு அஞ்சி இவர்கள் தப்பித்துச் செல்ல முயன்ற போது சுற்றிவளைத்த 30 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், 14 பேரைக் கொத்தாக படுகொலை செய்தனர். இதில் பானுவின் 3 வயது பெண்குழந்தை சலேஹா பாறை யில் அடித்துக் கொலை செய்யப் பட்டது. 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு உட்பட 4 பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். 

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இவர்கள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷை லேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின்  சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹா னியா, பிரதீப் மோர்தியா, பகபாய்  வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும்  ரமேஷ்  சந்தனா ஆகிய குற்றவாளிகள் 11  பேரையும், கடந்த ஆகஸ்ட்  15 அன்று சுதந்திர தின பவளவிழா வை முன்னிட்டு குஜராத் பாஜக அரசு சிறையில் இருந்து விடுதலைசெய்தது.  1992-ஆம் ஆண்டின் குஜராத் மாநில சிறைக் கைதிகள் தண்ட னைக் குறைப்பு கொள்கை அடிப் படையில், 11 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க  குஜராத் அரசுக்கு அதிகாரம் உள் ளது என்று நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியதாகவும், அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாக மாநில பாஜக அரசு கூறிக்கொண்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்னடத்தை விதி பொருந்தாது என்று கூறின. மேலும், குற்றவாளிகளில் ஒருவர் 2020-இல் பரோலில் வெளியே வந்த போது ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அரசின் பிரமாணப் பத்திரமே குறிப்பிடுவ தால், நன்னடத்தை எங்கே இருக்கி றது? என்றும் கேள்வி எழுப்பின.

பில்கிஸ் பானு வழக்கில் குற்ற வாளிகள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு  உறுப்பினர் சுபாஷினி அலி,  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.  மஹூவா மொய்த்ரா, பத்திரிக்கை யாளர் ரேவதி லால், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீரான் சாதா போர்வான்கர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையிலேயே, தற்போது பில்கிஸ் பானுவும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

;