அதிமுக சரியாக இல்லை: சசிகலா கண்டுபிடிப்பு
சென்னை,அக்.17- அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களே உட்பகை கொண்டவர்கள் என்றும் நீக்கப்பட்டவர்கள்,நீக்கப்பட்டவர்கள்தான் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சசிகலா வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக தற்போது சரியாக இல்லை. கட்சியை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்தி 2026-ல் மக்களாட்சி அமைக்கப் போவதாக கூறிக்கொண்டார்.
ரூ.1,500 கோடியில் நவீனமாகிறது ஹூண்டாய் ஆலை
சென்னை,அக்.17- சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.தமிழகத்தில் ரூ.26,000 கோடி முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் 5.40 லட்சம் சதுர அடியில் ஹூண்டாய் கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்,தற்போது 1.81 லட்சம் சதுர அடியில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, இந்த தொழிற்சாலை மூலம் 19,706 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கூடுதலாக155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை,அக்.17- கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.அந்த காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிராக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கொரோனா காலத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்காத உரிமையாளர்கள் இழப்பை சந்தித்திருப்பதாகவும் 2021 அக்டோபர் முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.
கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை,அக்.17- தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட தமிழகம் முழுவதும் மழை தொடங்கியது. ரெட் அலர்ட் வாபஸ் புதன்கிழமை (அக்.16) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இத னால் மழை குறைந்தது. பின்னர் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசை யில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே அக்டோபர் 17 அன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ் நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது.
அரசு பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட்
சென்னை, அக்.17- சென்னை தவிர மற்ற 7 போக்குவரத்துக் கழகங் களில் 3 மாதத்தில் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை செய லாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். 3 மாதங்களில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களி லும் மின்னணு டிக்கெட் இயந்திரம் பயன்பட்டிற்கு வரும் என்றும் சென்னை யில் மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப் படுத்தப்பட வுள்ளது என்று போக்குவரத்துறை செய லாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
இ-ஃபைலிங் முறை உயர்நீதிமன்றம் அதிருப்தி
சென்னை,அக்.17- காவல்துறை மற்றும் விசாரணை நீதிமன்றம் ஆகிய இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவச மாக இரு தரப்பும் முறை யாக பின்பற்றாமல் ஒரு வரை ஒருவர் குற்றம் சுமத்து கின்றனர் என்று உயர்நீதி மன்றம் அதிருப்தி தெரி வித்துள்ளது. திண்டுக் கல்லைச் சேர்ந்த ஜனார்த்த னன் என்பவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் விசாரணையின்போது நீதி பதி இதனை தெரிவித்தார்.
ரயில் முன்பதிவு காலம் குறைப்பு!
சென்னை,அக்.17- ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான கால அளவை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறை த்து ரயில்வே முக்கிய அறி விப்பு ஒன்றை வெளியிட்டுள் ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரு கிறது. அதே நேரத்தில், வெளிநாட்டு பயணிகளுக்கு முன்பதிவு காலம் 365 நாள்கள் என்பதில் மாற்ற மில்லை.