states

img

சிக்கிமில் 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான சிக்கிம் மாநிலத்தின் லேசன் பள்ளத்தாக்கில், டீஸ்டா  ஆறு உருவாகும் பகுதியில், புதனன்று மேகவெடிப்பு காரணமாக பலத்த மழை  பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதால் டீஸ்டா ஆற்றில்  அபாய அளவைத் தாண்டி வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தலை நகர் கேங்டாக், தெற்கு லோனார்க் ஏரி  பகுதிகள் வெள்ளத்தால் உருக்குலைந் துள்ளன. கேங்டாக் பகுதியில் சுமார் 30  கிமீ அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  இந்நிலையில், 23 ராணுவ வீரர்கள்  லேசன் பள்ளத்தாக்கு அருகே வெள் ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்  களைத் தேடும் பணியில் ராணுவத்தின ரும், துணை ராணுவப் படையினரும் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்  களுடன் பொதுமக்களும் பலர் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்க லாம் என அஞ்சப்படுகிறது.