states

‘பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது நல்லது’

‘பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது நல்லது’

மாநிலங்களவையில் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா விளாசல்!

மணிப்பூர் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மணிப்பூர் மாநில அரசின் பட்ஜெட்  ஒன்றிய அரசாங்கத்தின் சார்பில் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்ற போது பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா பேசிய தாவது: மணிப்பூர் மாநில பட்ஜெட்டை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசி யம் ஏன் ஏற்பட்டது? நம் தேசம் ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று பீற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால், மணிப்பூர் மாநில பட்ஜெட்டை இங்கே தாக்கல் செய்வதன்மூலமாக அந்த ஜனநாயகம் சிதறுண்டு போயிருக்கிறது.

சின்னாபின்னமான  நல்லிணக்க மாநிலம்

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்துடன் முதன்முதலாக வந்த இடம் மணிப்பூர் . உண்மையில் அது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும்.  மத நல்லி ணக்கத்திற்கு முன்மாதிரியாக இருந்த மணிப்பூர் மாநிலம், சகோதரத்துவத்தைப் பின்பற்றி வந்த மணிப்பூர் மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசாங்கத்தினால்  சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது.  நீங்கள் அங்கே சென்றீர்கள் என்றால் அங்குள்ள நிலைமைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். பள்ளிக்கூடங்கள் இடித்துத்தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மிஷனரிகள் நடத்தி வந்த பள்ளிக்கூடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. அங்கே வாழ்ந்துவந்த இரு இனத்தவர்களும் இன்று எலியும் பூனையுமாக எதிரெதிராக நின்றுகொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த அரசாங்கம் அம்மாநிலத்திற்கு அளித்துள்ள பங்களிப்பாகும்.

இரட்டை என்ஜின் அரசின் தோல்வி

இப்போது இந்த இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதால் இங்கே நாடாளுமன்றத்தில் இந்த பட் ஜெட்டைத் தாக்கல் செய்துகொண்டி ருக்கிறீர்கள்.  இவ்வாறு ஓர் அழகான விஷ யத்தை அங்கே பிரதமர் செய்திருக்கிறார் என்று உரக்கக்கூவிக் கொண்டிருக்கிறீர்கள். (சில சொற்றொடர்கள் அவைக்குறிப்பி லிருந்து நீக்கப்பட்டுவிட்டன.) இப்போது, இந்தத் தவறான ஆட்சி மற்றும் நிர்வாகத்தால், மணிப்பூர் மக்கள் ஒருவரோடொருவர் சேர்ந்து உட்கார முடி யாத நிலையில் உள்ளனர்; ஒருவரோடொரு வர் பேசவும் முடியாத நிலையில் இருக்கி றார்கள்.  இந்திய நாடு வழங்கிய அடிப்படை ஜனநாயக உரிமைகள் தங்களுக்கு மறுக்கப் பட்டுவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

பிரதமர் செல்லாதது நல்லது  

“மோடி ஜி, நாங்கள் இந்தியாவின் ஓர் அங்கம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லையா?” என்று அவர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.   பிரதமர் மோடி  இதுவரை அங்கே செல்ல வில்லை. அதற்காக அவருக்கு நான் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். (சில சொற்றொடர்கள் அவைக்குறிப்பி லிருந்து நீக்கப்பட்டுவிட்டன.) நீங்கள் பேசும்போதெல்லாம் மதத்தின் அடிப்படையில் பேசுகிறீர்கள், இனத்தின் அடிப்படையில் பேசுகிறீர்கள். இந்திய மக்களின் ஒற்றுமையின் அடிப்படையில் பேசுவதில்லை. எனவேதான், பிரதமர் அங்கே செல்லாதது மிகவும் நல்லது. இதன் விளைவு, மணிப்பூர் பட்ஜெட்டை இங்கே நீங்கள் தாக்கல் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

கல்வி நிலையங்கள் தரைமட்டம்

 கல்விக்கான ஒதுக்கீடு என்ன? அங்கே மத வெறியின் அடிப்படையில் மக்களிடையே உருவாக்கப்பட்ட பிரிவினையின் அடிப்ப டையில் ஊக்கம்பெற்ற மத வெறியர்கள் அங்கே இருந்த அனைத்துக் கல்வி நிறு வனங்களையும் இடித்துத் தரைமட்ட மாக்கிவிட்டார்கள். நீங்கள் மதத்தின் அடிப்ப டையில் பேசுகிறீர்களேயொழிய, நாட்டு மக்களின் மத நல்லிணக்கத்தின் அடிப்படை யிலோ சகோதரத்துவத்துடனோ பேசுவ தில்லை.  நம் அரசமைப்புச்சட்டத்தின் விழுமி யங்களின் அடிப்படையில் நீங்கள் பேசு வதில்லை. மணிப்பூருக்கான ஒதுக்கீடு குறித்து இந்தச்சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஒதுக்கீடு செய்தாலும், இது அங்கே அமைதியை மீண்டும் கொண்டுவராது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நியராக எண்ண  வைத்து விட்டீர்கள்

மணிப்பூர் மக்களுக்கு அமைதியை மீண்டும் கொண்டு வர, சகோதரத்துவ கலாச்சாரத்தை வளர்ப்போம். மக்களின் மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை நோக்கி முன்னேறுவோம். அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதி. அவர்கள் அந்நி யர்கள் அல்ல. நீங்கள் அவர்களை அந்நியர் கள் என்று உணர வைத்துவிட்டீர்கள். இப்போது, நாம் இறுதியில் இந்த ஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அது உண்மையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நன்மைகளை அவர்களுக்கு வழங்குமா? அது இந்திய ஒற்றுமையின் பலனைத் தருமா? அங்குள்ள  மக்கள் தங்களைக் கவனித்துக் கொள்ளக் கூடிய ஒரு அரசாங்கம் இருப்பதாக உணரட்டும்.  இப்போது அவர்கள் தங்களுக்கு ஒரு தனி நிர்வாகம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இப்படி சிந்திக்க அவர்களைத் தூண்டியது யார்? அது பாஜக அரசு மட்டுமே. நிலைமை இயல்பாக இருந்தபோது, நீங்கள் அதை மோசமாக்கியுள்ளீர்கள். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

குடியரசுத் தலைவர் ஆட்சி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல

 இப்போது, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. உங்கள் இரட்டை எஞ்சின் அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே, இரட்டை எஞ்சின் அரசு பற்றி மீண்டும் பேச வேண்டாம். மாறாக, அதிகாரப் பரவலாக்கத்தில் கவனம் செலுத்தி, அவர்களின் பலம் மற்றும் அவர்க ளின் சொந்த கலாச்சாரம், கல்வி, மொழி போன்றவற்றின் அடிப்படையில் அனைவருக் கும் சமமான அதிகாரத்தை வழங்குவதைப் பற்றி சிந்தியுங்கள்.  ஒன்றியத்திலிருந்து எதையும் திணிக்க முயற்சிக்காதீர்கள். அது உண்மையில் நாட்டை உடைக்கும். ஒதுக்கீட்டு சட்டமுன்வடிவைப் பரி சீலிக்கும் போது, மணிப்பூர் மக்கள் மெய்டெய் அல்லது குக்கியாக இல்லாமல், தாங்கள் மணிப்பூரிகள் என்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தரையிறங்கிய மாபெரும் நாடான இந்தி யாவின் ஒரு பகுதி என்றும் உணர வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா பேசினார்.