states

img

“இந்தியாவில் 544 மரண தண்டனைக் கைதிகள்

“இந்தியாவில் 544 மரண தண்டனைக் கைதிகள்

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனைக் கைதிகள் அடைப்பட்டுள்ளதாக நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரி வித்துள்ளது. இதுதொ டர்பாக மக்களவை யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணைய மைச்சர் பண்டி சஞ்சய் குமார் அளித்த பதிலில்,”கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் 544 மரண தண்டனைக் கைதிகள் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் 95, குஜராத் தில் 49,  ஜார்க்கண்டில் 45, மகாராஷ்டிரா வில் 45, மத்தியப்பிரதேசத்தில் 39, கர்நாட காவில் 32, பீகாரில் 27, மேற்கு வங்கத் தில் 26, ஹரியானாவில் 21, ராஜஸ்தா னில் 20, உத்தரகண்டில் 20, கேரளாவில் 19,  ஆந்திராவில் 15, தமிழ்நாட்டில் 14,  தில்லியில் 9, ஜம்மு-காஷ்மீரில் 8 என மாநில சிறைகளில் மொத்தம் 544 மரண தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர்” என அவர் தெரிவித்தார்.