states

img

உத்தரப்பிரதேச பாஜகவில் வலுக்கும் உட்கட்சி சண்டை

18ஆவது மக்களவை தேர்தலில் பாஜகவின் கோட்டையாக கூறப் படும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதாவது மொத்தமுள்ள 80 இடங்களில் இந்தியா கூட்டணி 44 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், பாஜக கூட்டணியோ 36 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியை சந்தித்தது. குறிப்பாக உத்த ரப்பிரதேசத்தில் போட்டியிட்ட ஒன்றிய, மாநில அமைச்சர்களும், பிரபலங்களும் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், பாஜகவின் அரசியல் ஆதாய பொரு ளான ராமர் கோவில் இருக்கும் அயோத்தி க்கு உட்பட்ட பைசாபாத் தொகுதியிலும் பாஜக மண்ணைக் கவ்வியது. இந்த தோல்விக்கு பிறகு உத்தரப்பிரதேச பாஜக வில் உட்கட்சி சண்டை தீவிரமடைந்துள் ளது.