திருவாரூர், நவ.12 - தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் இருப்பதால், சுகாதாரக் கேடான உணவை வழங்கும் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள நீலக்குடியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வரு கிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வரு கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படித்து வரும் மாண வர்களுக்கு வழங்கும் உணவில் பூச்சிகள், புழுக்கள் நிறைந்து சுகாதாரக்கேடான நிலையில் உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வா கத்திடம் மாணவர்கள் புகார் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து மாணவர்கள் புகைப் படம் மற்றும் காணொலி வாயிலாக ஆதாரத்து டன் சமூக ஊடகங்க ளில் வெளியிட்டுள்ள னர். இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.சுகதேவ் தெரி விக்கையில், “கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இச்செய்தியை கேள்விப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சென்றி ருந்தோம். ஆனால் பல்கலைக்கழக நிர்வா கம் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் கேண்டீனை நாங்கள் ஆய்வு செய்வ தாக கூறினோம். அதையும் மறுத்துவிட்ட னர். தற்போது இந்த பிரச்சனை சமூக ஊட கங்களில் பரவி உள்ளது. பல்கலைக்கழக நிர்வா கம் மாணவர்களுக்கு வழங்கும் உணவை தரமாக வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாண வர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் பல்கலைக்கழ கத்தை கண்டித்து போராட் டம் நடைபெறும்” என்றார். இப்பிரச்சனை குறித்து பல்கலைக்கழகத்தை தொ டர்பு கொண்டு கேட்ட போது, “பல்கலைக்கழ கத்தின் பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு, உணவகத்தின் சமையல் அறை மற்றும் குடிநீர் டேங்க்குகளை நேரில் சென்று ஆய்வு செய்து, காய்கறியில் புழு இருந்த புகாரைத் தொடர்ந்து சமையல் செய்யும் தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மீது நடவ டிக்கை எடுத்துள்ளதாகவும், பல்கலைக்கழ கத்தின் பராமரிப்பு துறை வாயிலாக தகுந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும்” பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.