states

ஆம்னி பேருந்து கட்டணம் அநியாய உயர்வு

சென்னை,அக்.02- ஆம்னி பேருந்துகளில் மிகப்பெரிய அளவில் கட்டணம் உயர்த்தப் பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: தொடர் விடுமுறை முடிந்து மக்கள் ஒட்டு மொத்தமாக சென்னைக்கு திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக்கொள்ளை   நடைபெறுகிறது. இதனால் பொது மக்கள் பெரும்  அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக நாகர்கோவில், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வழக்கமாக ரூ.  1000 முதல் ரூ. 1500 வரை  கட்டணமாக வசூலிக்கப் படும். ஆனால், இன்று ரூ.  4700 ஆக அதிகரிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று மதுரை, சேலம், பெங்களூர், கோவை, திருச்சி ஆகிய  நகரங்களிலிருந்து பல  மடங்கு கட்டணம் உயர்த்தப் பட்டு ரூ. 4500 முதல் ரூ.  5000 வரை வசூலிக்கப்பட்டுள் ளது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்ட விதி களை மதிக்காமலும், சட்டத் திற்கு புறம்பாகவும் செயல்படுவதே முக்கிய கார ணமாகும்.

 இந்த கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், தொடர் விடு முறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதீதமான கட்டண  உயர்வு என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளி யூரிலிருந்து சென்னை நக ருக்கு வந்து வசிக்கும் ஏழை,  எளிய, நடுத்தர மக்கள் கடு மையாக பாதிக்கப்படுகின்ற னர். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அதன் உரிமை யாளர்கள் நிர்ணயிப்பதே இந்த கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த கட்டண உயர்வை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றங்கள் பல உத்தர வுகளை பிறப்பித்தும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ளாததன் விளைவே இந்த தொடர் கட்டண  உயர்வு நடப்பதற்கு காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே, பொதுமக்க ளின் நலனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து களின் இந்த கட்டண  உயர்வைத் தடுப்பதற்கும், ஆம்னி பேருந்து களின் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நட வடிக்கைகள் மேற்கொள்வ தோடு, அதீத கட்டண  உயர்வில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் உரிமை யாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளை அதிகரித்து கூடுதலாக இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.