states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. அரபு லீக்கின் உறுப்பினராக சிரியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அல்ஜீரியா கோரியுள்ளது. பிராந்திய ரீதியான இந்த அமைப்பு நிறுவப்படும்போது அதில் உறுப்பினராக சிரியா இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அல்ஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ராம்டானே லமாம்ரா, “அரபு நாடுகள் மீண்டும் ஒன்று சேர்வதை தங்கள் நாடு முழுமையாக ஆதரிக்கிறது. சவால்களைக் கூட்டாக சமாளிக்கும் வகையில் பொதுவான அரபு அமைப்பைப் பலப்படுத்த அனைத்துப் பணிகளையும் அல்ஜீரியா செய்யும்” என்று குறிப்பிட்டார். 
  2. கியூபாவுக்குத் தங்கள் ஆதரவு முழுமையாக உள்ளது என்று அந்நாட்டிற்கான எகிப்து தூதுவர் மகர் எல் அடாவி தெரிவித்துள்ளார். கியூபா புரட்சி வெற்றிகரமாக நடந்தேறியபோது, ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து முதன்முதலாக தூதரக உறவை கியூபாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நாடு எகிப்தாகும். அறிவியல் ஆய்வுத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் என்று அடாவி குறிப்பிட்டார்.
  3. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு, அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் எதையும் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவோல் மக்ரோன் மேற்கொள்ளவில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அமைச்சரை நீக்கியுள்ளார். பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய இருவரும் மாற்றப்படவில்லை. அதே நபர்களைக் கொண்டு மீண்டும் துவங்குகிறார்கள் என்றுதான் தெரிகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பேபியன் ரூசெல் தெரிவித்துள்ளார்.