states

செப்.27 பந்த் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்!

சென்னை,செப்.22- வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 27 அன்று நடை பெறுகின்ற அகில இந்திய பந்த் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுகுறித்து இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்த ரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) மாநிலச் செயலாளர் என்.கே. நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு: ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண்  சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை எதிர்த்தும் தலைநகர் புதுதில்லியில் 11 மாதங் களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் விவசாயி களுக்கு விரோதமான இச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது போல் கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவை யிலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவைகளை  உதாசீனப்படுத்தும் ஒன்றிய  அரசை கண்டித்தும், வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி  அகில இந்திய பந்த் போராட்டத்தை அறி வித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றன. இப்போராட்டத்தில் இடதுசாரி கட்சி தோழர்கள் தமிழகம் முழுவதும் அதிகமான மக்களை திரட்டி சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்திட வேண்டுமெனவும் பந்த் போராட்டத்தை விளக்கி மக்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டு மெனவும் கேட்டுக் கொள்கிறோம். இந்திய விவசாயிகளை வஞ்சித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரும் ஒன்றிய பாஜக அரசினை கண்டித்து நடைபெறும் இந்த அகில இந்திய பந்த் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழி லாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (எம்.எல் ) ஆகிய கட்சிகளின் சார்பில் தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;